ஒரு மாணவர் KOH இன் குறிப்பிட்டட நீர்கரைசலொன்றின் கனவளவு 25cm3 உள்ள பல பிரிவுகளுக்கும் 0.100 mol dm-3 HBr நீர்க்கரைசலொன்றிற்குமிடையே பல நியமிப்புகளைத் தனித்தனியாகச் செய்தார். HBr கரைசல் அளவியில் இருந்தது. KOH கரைசல் பல நாட்கள் பழையது. அவர் ஒரு நியமிப்பில் அளவி வாசிப்பைப் பெறுவதற்கு மெதயில் செம்மஞ்சளைப் பயன்படுத்தினார். அவர் அடுத்த நியமிப்பில் அளவி வாசிப்புக்காகப் பினோத்தலீனை பயன்படுத்தினார். இவ்விரு அளவி வாசிப்புகளுக்குமிடையேயுள்ள வித்தியாசம் ஏறத்தாழ 5cm3 ஆகும். இவ்வித்தியாசம் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுக்களில் எது மிகவும் பொருத்தமானது,