அளவியில் உள்ள நீர் முப்புளோரோவெதனொயிக்கமிலத்துடன் நியமிப்புக் குடுவையில் உள்ள நீர் மெதயில் அமைனின் நியமிப்புப் பற்றிப் பின்வரும் எக்கூற்றுகள் / எக்கூற்று உண்மையானவை / உண்மையானது?
(a) இந்நியமிப்பின்போது pH இல் முனைப்பான மாற்றம் அண்ணளவாக வீச்சு 10 – 8 இலே ஏற்படுகின்றது.
(b) இந் நியமிப்பின்போது pH இல் முனைப்பான மாற்றம் அண்ணளவாக வீச்சு 9 – 4 இலே ஏற்படுகின்றது.
(c) இந்நியமிப்புக்கு மெதயிற் சிவப்பு உகந்த காட்டியாகும்.
(d) இந்நியமிப்புக்கு பினோத்தலீன் உகந்த காட்டியாகும்.