Pb2+ குறித்த 0.05 mol dm-3 ஆகவும் Ni2+ குறித்து 0.10 mol dm-3 ஆகவும் உள்ள நடுநிலை நீர்க் கரைசல் ஒன்றினூடாக H2S வாயுவை அனுப்பும்போது Pbs, Nis ஆகிய இரண்டும் படிவு வீழ்த்தப்படுகின்றன. Pb2+, Ni2+ ஆகியவற்றைக் கொண்ட அமிலமாக்கிய கரைசல் ஒன்றினூடாக H2S வாயுவை அனுப்பும் போது PbS மாத்திரம் படிவு வீழ்த்தப்படுகின்றது. பின்வருவனவற்றுள் எது / எவை மேலே குறிப்பிட்ட அவதானிப்புகளினால் உறுதிப்படுத்தப்படுகின்றது / உறுதிப்படுத்தப்படுகின்றன?
(a) PbSஇன் கரைதிறன் பெருக்கம். NiS இன் கரைதிறன் பெருக்கத்திலும் சிறியது.
(b) நடுநிலை நீர்க் கரைசலிலே PbS இன் கரைதிறன் பெருக்கம் NiS இன் கரைதிறன் பெருக்கத்திற்குச் சமம்.
(c) கரைதிறன் பெருக்கம் பற்றிய எண்ணக்கரு மேலே குறிப்பிட்ட நடுநிலை நீர்க் கரைசலுக்குப் பொருந்தாது.
(d) கரைதிறன் பெருக்கம் பற்றிய எண்ணக்கரு மேலே குறிப்பிட்ட அமிலமாக்கிய கரைசலுக்குப் பொருந்தாது.