ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தூய கரைப்பானொன்றினது ஆவியமுக்கம் P0 ஆகும். A எனும் கரையம் உள்ளடங் கும் வண்ணம், இக்கரைப்பானினால் இரண்டு கரைசல்கள் தயாரிக்கப்பட்டன. இக்கரைசல்களிரண்டினதும் A மூல் பின்னங்கள் முறையே 0.1 உம், 0.4 உம் ஆகும். மேற்படி வெப்ப நிலையில் இக்கரைசல்கள் இரண்டினதும் ஆவியமுக்கம் முறையே P1 உம் P2வும் ஆயின் பின்வருவனவற்றுள் எத்தொடர்பு உண்மையானதாகும்?