இரு பிரதான பிரதிநிதித்துவ முறைமைகளின் சில பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
A – ஒரு தேர்தலில் வழங்கப்படும் ஒவ்வொரு வாக்குக்கும் சம நிறை உத்தரவாதப்படுத்தப்படுகிறது
B – பல கட்சி முறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது
C – சிறிய கட்சிகளுக்குப் பாதகமாக அமைந்துள்ளது
D – அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.
E – கட்சித் தலைமைத்துவத்தை உயர்நிலைப்படுத்துகிறது
F – பிரதேசங்களைப் பிரதிநிதிப்படுத்தல் பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.
விகிதசமப் பிரதிநிதித்துவத்துக்குப் பொருந்தும் கூற்றுகளின் சேர்மானத்தை இனங்காண்க.