“C” எனத் தரப்பட்டுள்ள அரசினை நீர் எவ்வாறு வகைப்படுத்துவீர்?
A – A என்ற அரசின் அரசியல் யாப்பின்படி அவ்வரசின் எல்லாச் சட்டவாக்கங்களும் பாராளுமன்றத்தின் இரு சபைகளினதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேற்றப்படும். இவ்வரசியல் யாப்பைத்
திருத்துவதற்கும் இருசபைகளினதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படும்.
B – B என்ற அரசினது அரசியல் ஒழுங்கு அரசியல் யாப்பு என்று அழைக்கக் கூடிய எதுவித ஆவணத்தையும் கொண்டிருக்கவில்லை.
C – C என்ற அரசில் மாகாண நிர்வாக அலகுகள் பல நிச்சயமான அதிகாரத்துடன் இருக்கின்றன. அவற்றினை ஒருதலைப்பட்சமாக கலைப்பதற்கு மத்திய அரசாங்கத்தால் முடியும்.
D – D என்பது பொது, பொருளாதார, தொழினுட்பப் பிரச்சினைகளைப் பற்றிக் கவனமெடுப்பதற்காக நிறுவப்பட்ட, பல்வேறு சுதந்திர அரசுகளின் ஒரு ஒழுங்கமைப்பாகும்.