சக்திச்சொட்டெண் n= 3 ஐயும், ml=-2 ஐயும் கொண்டிருக்கும் ஓர் இலத்திரன் தொடர்பாகப்
பின்வரும் கூற்றுகளில் எது/ எவை உண்மையானது /உண்மையானவை?
(a) இவ் இலத்திரன் மூன்றாம் பிரதான சக்தி மட்டத்தில் உள்ளது.
(b) இவ் இலத்திரன் ஒரு d ஓபிற்றலில் உள்ளது.
(c) இவ் இலத்திரன் ஒரு p ஓபிற்றலில் உள்ளது.
(d) இவ் இலத்திரன் ஒரு கறங்கற் சக்திச் சொட்டெண் ms = +1/2 இனைக் கொண்டிருத்தல் வேண்டும்