ஈயம், பித்தளை, உருக்கு என்னும் 
வெவ்வேறு திரவியங்களிலிருந்து செய்யப்பட்ட A, B, C என்னும் மூன்று பொள் உருளைகளின் குறுக்கு வெட்டுத் தோற்றம் உருவில் காணப்படுகின்றது. இவை அறை வெப்பநிலையில் ஒன்றோடொன்று மட்டுமட்டாகப் பொருந்துகின்றன. உருளைகள் வெப்பமாக்கப்படும் போது உருளை C விழுகின்ற அதேவேளை உருளை A உருளை B யுடன் இறுக்கமாகப் பொருந்துகின்றது. αஈயம் , α பித்தளை , α உருக்கு எனின், A, B, C ஆகிய உருளைகள் பெரும்பாலும் செய்யப்பட்டிருக்கும் உலோகம்.