அயனாக்கச் சக்தி தொடர்பாக பின்வரும் கூற்றுக்களுள் சரியானது எது/சரியானவை எவை?
(a) சோடியத்தின் இரண்டாவது அயனாக்கச் சக்தி பொற்றாசியத்தின் இரண்டாவது அயனாக்கச்சக்தியைவிடச் சிறியதாகும்.
(b) மூன்றாவது ஆவர்த்தனத்தைச் சேர்ந்த மூலகங்கள் அனைத்தினதும் முதலாவது அயனாக்கச் சக்தி சிறப்பியல்பான வளை நெளிமாறலைக் காட்டுகின்றது.
(c) நான்காவது ஆவர்த்தனத்தைச் சேர்ந்த மூலகங்கள் அனைத்தினதும் முதலாவது அயனாக்கச் சக்தி சிறப்பியல்பான வளை நெளி மாறலைக் காட்டுகின்றது.
(d) போரனின் நான்காவது அயனாக்கச்சக்தி காபனின் ஐந்தாவது அயனாக்கச் சக்தியை விடப் பெரியது.