சீர் வேகம் (v) உடன் இயங்கும் +q, -q என்னும் இரு மின்னேற்றங்கள் ஒரு சீர் மின் புலம் (E) ஐயும் ஒரு சீர்க் காந்தப் புலம் (B) ஐயும் உடைய ஐந்து பிரதேசங்களினுள்ளே வேறுவேறாகப் பிரவேசிக்கும் நிலைமைகள் உருக்களில் காணப்படுகின்றது. காவிகள் E யும் B யும் எப்போதும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் அதேவேளை காவி v ஆனது E யிற்கும் B யிற்கும் செங்குத்தாகவோ, E யிற்குச் சமாந்தரமாகவோ இருக்கலாம். மின்னேற்றங்கள் தமது திசைகளை மாற்றாமல் பிரதேசத்திற்குக் குறுக்கே இயங்குவதற்காக இயல்தகவைப் பின்வரும் உருவமைப்புகளில் எது வழங்கக்கூடும்?