வினா இலக்கம் 12, 13, 14 என்பவற்றுக்கு விடையளிக்க பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.
2014.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான பாசித், அல்பரட், ருக்ஸான் பங்குடமை வணிகத்தின் தகவல்களில் சில வருமாறு
A – அல்பரட்டின் பங்குடமைச் சம்பளம் வருடாந்தம் ரூபா. 24 000
B – மேற்குறிப்பிட்ட சம்பளத்தில் ரூபா. 12 000 குறித்த வருடத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
C – பாசித், அல்பரட், ருக்ஸான் என்பவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இறுதிப் பங்கிலாபம் முறையே ரூபா. 40 000, ரூபா. 30 000, ரூபா. 20 000 ஆகும்.
D – ருக்ஸான் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ரூபா. 3 000 திற்கு எவ்வித பதிவுகளும் செய்யப்படவில்லை.
E – பாசித், ருக்ஸான் என்போர்களின் பொருள் பற்று முறையே ரூபா. 3 000இ ரூபா. 2 000 ஆக இருந்ததுடன் இது தொடர்பில் எவ்விதப் பதிவும் செய்யப்படவில்லை.
மேற்காட்டிய உருப்படிகளில் எவ்வுருப்படிகள் பங்காளர்களிடையே மேற்கொள்ளப்படுகின்ற இலாப நட்டப் பகிர்வாகக் கருதப்படும்.