ஒரு நீண்ட கம்பி ABC ஆனது 60° கோணத்தை ஆக்குமாறு வளைக்கப்பட்டு, உருவில் காணப்படுகின்றவாறு சீர்க்காந்தப் புலம் ஒன்றுக்கு செங்குத்தான தளம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. 
அதே திரவியத்தினால் செய்யப்பட்ட சம குறுக்கு வெட்டுப் பரப்பளவைக் கொண்ட வேறொரு நீண்ட நேர்க்கம்பி PQ ஆனது முக்கோணி RBS எப்போதும் சமபக்க முக்கோணியாக இருக்குமாறு கம்பி ABC மீது ஒரு மாறா வேகத்துடன் இழுக்கப்படுகின்றது. முக்கோணி RBS இலே தூண்டப்படும் மின்னோட்டம் (L) ஆனது நேரம் (t) உடன் மாறுவதை மிகச் சிறந்த முறையில் வகைகுறிக்கும் வரைபு யாது?