d1,d2,(d1>d2) என்னும் அடர்த்திகளை உடைய இரு கலக்குமியல்பில்லாத திரவங்கள் ஒரு மிகப் பெரிய விட்டமுள்ள ஓர் உருளைத் தொட்டியில் உள்ளன. தொட்டியின் அடிக்குக்கிட்ட ஒரு சிறிய துவாரம் உள்ளது (உருவைப் பார்க்க). ஒரு குறித்த கணத்தில் திரவங்களின் உயரங்கள் h1,h2 எனின், அக்கணத்தில் தொட்டியிலிருந்த வெளியே திரவம் செல்லும் கதி U யாது? பரப்பிழுவை விளைவுகளைப் புறக்கணிக்க. திரவங்கள் பிசுக்கற்றவையெனக் கொள்க.