2016Bio06c

Author : Admin

Topic updated on 12/23/2016 11:00am

குருதிப் பிரசாரண அமுக்கத்தை மனித சிறுநீரகம் எவ்வாறு சீராக்குகின்றது எனச் சுருக்கமாக விளக்குக.

 

RATE CONTENT 0, 0
Answers

பிரசாரண அமுக்கம் சீராக்கல்

  • இது பிரசாரண வாங்கிகளால் உணரப்படும்
  • பிரசாரண வாங்கிகள் பரிவகக்கீழில் காணப்படும்
  • ADH ஐ விடுவிக்கும் பொருட்டு இது பிற்பக்க கபச்சுரப்பியைத் தூண்டும்
  • ADH சேய்மை மடிந்த குழலுருவிலும் சேர்க்கும் கானிலும் தொழிற்பட்டு அவற்றின் நீர்புகவிடுமியல்பை அதிகரிக்கும்.
  • இதனால் நீர் மீள அகத்துறிஞ்சல் நடைபெறும்.
  • அதி பிரசாரணத்துக்குரிய செறிவான சிறுநீர் உருவாகும்.
  • பிரசாரண அமுக்கம் சாதாரண நிலையை அடையும்.
  • பொறிமுறை நிறுத்தப்படும். எதிர்ப் பின்னூட்டல் பொறிமுறையில் நடைபெறும்.
  • பிரசாரண அமுக்கம் குறைவடையும் போது பிரசாரண வாங்கிகள் தூண்டப்படமாட்டா.
  • ADH விடுவிக்கப்படாமையினால் நீரின் மீள அகத்துறிஞ்சல் இடம்பெற மாட்டாது.
  • சேய்மை மடிந்த சிறுகுழலுருவிலும் சேர்க்கும் கானிலும் உபபிரசாரணத்துக்குரிய ஐதான சிறுநீர் உருவாகும். பிரசாரண அமுக்கம் சாதாரண நிலையை அடையும்.
Comments Hide Comments(0)

Leave a Reply