ஓரலகு நீளத்துக்கு வெவ்வேறு திணிவுகளைக் கொண்ட AB,BC என்னும் இரு பகுதிகளை உடைய சேர்த்தி இழை ஒன்று தரப்பட்ட இழுவை ஒன்றுக்கு ஈர்க்கப்படுகின்றது. AB யின் ஓரலகு நீளத்துக்கான திணிவானது BC யினது ஓரலகு நீளத்துக்கான திணிவிலும் மிகவும் குறைவாகும். இழையிலே துடிப்பு ஒன்று உண்டாக்கப்பட, அது உருவிற் காட்டப்பட்டுள்ளவாறு AB வழியே வலப்பக்கமாக இயங்குகின்றது. 
துடிப்பு சந்தி B யை அடைந்த பின்னர் இழைகளில் ஏற்படும் துடிப்புகள் எவ்வாறு இருக்கும்?