ஈராக்கில் நிலவும் நிலைமை பற்றிய ஐந்து கூற்றுகள் பின்வருமாறு
A – தமதுநாட்டை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்துக்கு எதிராகப் போரிடுவதற்காக ஈராக்கில் வதியும் இரு முக்கிய முஸ்லிம் சமயக் குழுக்கள் ஒன்றுபட்டுள்ளன.
B – ஈராக்கில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றம் 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலின் பேறுபேற்றில் செல்வாக்குச் செலுத்தும்.
C- ஐக்கிய அமெரிக்கா அரசுகளின் தலைமையில் ஈராக்கில் நடைபெற்ற இராணுவ ஆக்கிரமிப்புத் தொடர்பாக உலகில் எதிர்ப்பு படிப்படியாக அதிகரித்துவருகின்ற போதிலும் அவ்வாக்கிரமிப்புக்கு உதவும் நாடுகள் தமது வகிபாகத்தை தொடர்ந்து நிறைவேற்ற முயலுகின்றன.
D – ஈராக் ஆக்கிரமிப்பின்போது இறந்த அமெரிக்கப் போர் வீரர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க இவ்வாக்கிரமிப்புக்குப் பின்னர் இறந்த போர்வீரர்களின் எண்ணிக்கை கூடுதலாகும்.
E – ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஷுசைனைக் கைது செய்த
பின்னர் ஈராக் மக்களின் எதிர்ப்பு முடிவடையுமென எதிர்பார்க்கின்றன. மேற்கூறிய கூற்றுகளில் எவை சரியானவையென ஏற்றுக்கொள்ளப்படலாம்?