விவசாயிகள் அதிகமாக இரசாயனப் பீடைக் கொல்லிகளைத் தமது பயிர்களுக்குத் தெளிக்கின்றனர். இது குறுங்காலத்திற்குப் பீடைகளிலிருந்து விடுபடுவதற்குப் ப10ரணமான பயன்தரும் வழியாகும். இருந்தபோதும் இப்பீடைக் கொல்லிகள் அதிக அளவில் ஏனைய உயிரினங்களுக்கு நஞ்சாவதுடன் சூழலையும் மாசுபடுத்துகின்றது. பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கான வேறொரு வழி அவற்றை உண்ணும் ஒரு விலங்கினைக் கண்டுபிடித்து அதனைப் பயிர் விளையும் பிரதேசத்தில் அறிமுகப்படுத்துவதாகும். இரைகௌவி பீடைகளை இயற்கையாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும். இருந்தபோதும் இம்முறை பீடைகளை முற்றாக நீக்கி விடாது உயிரியல் பீடைக் கட்டுப்பாடு எனப்படும். இம்முறை சூழலுக்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்த மாட்டாது. ஆகவே இயலுமான போதெல்லாம் இரசாயனப் பீடைக் கொல்லிகளுக்குப் பதிலாக உயிரியல் பீடைக் கட்டுப்பாட்டினைப் பயன்படுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வாதத்தின் உள்ளார்ந்த எடுகோள் பின்வருவனவற்றுள் எது?